26.6 C
Jaffna
December 20, 2024
Pagetamil
இலங்கை

பெரமுனவினரை ஏரிக்குள் ‘குளிப்பாட்டியவர்களை’யும் பொலிசார் தேடுகின்றனர்!

மக்கள் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தி, மே மாத வன்முறைக்கு கால்கோளிட்ட சிறிலங்கா பொதுஜனபெரமுன குண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களை கொழும்பு பெய்ரா ஏரிக்குள் ‘குளிப்பாட்டிய’வர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

மே 09 அன்று பெரமுன குண்டர்களும்,ஆதரவாளர்களும் அலரிமாளிகைக்கு அழைக்கப்பட்டனர். அங்கு மஹிந்த ராஜபக்‌ஷவை சந்தித்த பின்னர் கொலைவெறியுடன் புறப்பட்டு, அலரி மாளிகைக்கு முன்பாகவும், காலி முகத்திடலுக்கு அருகாமையிலும் அமைதி வழியில் போராடிக் கொண்டிருந்த மக்கள்மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினர்.

இதனால் நாடு முழுவதும் கொந்தளித்து, பெரமுனவினரை நையப்புடைத்தனர். இதன் ஒரு அங்கமாக, பெரமுனவினரின் ஒரு பகுதியினர் கொழும்பு பெய்ரா ஏரிக்குள் தள்ளிவிடப்பட்டனர். ஏரிக்குள் தள்ளப்பட்டவர்களில் சிலர் மதுபோதையில் இருப்பதை போன்ற காணொளிகளும் வெளியாகியிருந்தன.

ஏரிக்குள் பெரமுனவினரை தள்ளிவிடும் காணொளிகள் வெளியாகி வைரலானது.

பொதுஜன பெரமுன கட்சியின் மாகாணசபை உறுப்பினர் ஒருவரிடமிருந்து பணத்தை திருடி பேரா குளத்தில் தள்ளியதாக கூறப்படும் நபர் ஒருவர் அண்மையில் கொழும்பு வெகந்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 34 வயதான தெமட்டகொட பகுதியைச் சேர்ந்தவர்.

சந்தேக நபர் ஒரு குழுவுடன் சேர்ந்து பேருந்தில் பயணித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாகாண சபை உறுப்பினரை எதிர்கொண்டு, அவரிடம் இருந்த பணம் முழுவதையும் கைப்பற்றி, அவரை பெய்ரா ஏரியில் தள்ளியுள்ளார்.

நாடு தழுவிய அமைதியின்மையின் போது பெரமுனவினரை பெய்ரா ஏரிக்குள் தள்ளியவர்களை கைது செய்ய பொலிஸார் தொடர்ச்சியான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஊர்காவற்துறை விபத்தில் இளைஞன் பலி

Pagetamil

வன்னி மாவட்ட முன்னாள் எம்.பியும் அவரது செயலாளரும் பிணையில் விடுதலை

Pagetamil

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு முன்னாள் பணிப்பாளரின் விளக்கமறியல் நீடிப்பு!

Pagetamil

கிளிநொச்சியில் ஒருவருக்கு மலேரியா

Pagetamil

யாழ்ப்பாணத்தை சிங்கப்பூராக்க வர்த்தகர்களாலேயே முடியும்

Pagetamil

Leave a Comment