முன்னாள் அரச தலைவர் ஒருவருக்கு சட்டத்தின் மூலம் வழங்கப்படும் சலுகைகள் மற்றும் வசதிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் உரிமை இருக்க வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், முன்னாள் ஜனாதிபதிக்கு சட்டரீதியாக கிடைக்க வேண்டிய பாதுகாப்பை உறுதி செய்யும் அரசாங்கத்தின் உத்தரவாதமின்றி, முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ நாடு திரும்ப முடியாது என முறைப்பாடு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் கட்டுரைகளை மேற்கோள் காட்டி கடிதம், எந்தவொரு குடிமகனும் நாடு திரும்புவதற்கான அரசியலமைப்பில் உள்ள விதிகளை அரச தலைவருக்கு நினைவூட்டியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறும், முன்னாள் ஜனாதிபதியை நாடு திரும்புவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் மனித உரிமைகள் ஆணைக்குழு அரச தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் இலங்கையில் இருந்து தப்பிச் சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது தாய்லாந்தில் தங்கியுள்ளார்.