ரூ.50 கோடி க்ளப்பில் தனுஷின் திருச்சிற்றம்பலம், கார்த்தியின் விருமன்

Date:

தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் 4 நாட்களில் உலக அளவில் ரூ.50 கோடி வசூலை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல், கார்த்தியின் ‘விருமன்’ பட வசூலும் ரூ.50 கோடியைத் தாண்டியுள்ளது.

‘யாரடி நீ மோகினி’, ‘உத்தம புத்திரன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் மீண்டும் தனுஷுடன் இணைந்த திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’.

நித்யாமேனன், ராஷி கண்ணா, ப்ரியா பவானி சங்கர், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் நடிப்பில் உருவான இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அனிருத் இசையைமத்த இப்படம் கடந்த ஓகஸ்ட் 18ஆம் திகதி திரையரங்குகளில் வெளியானது.

உலகளவில் 600 திரையரங்குகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இதனால் படம் வெளியான முதல் நாள் உலக அளவில் ரூ.9.52 கோடியை வசூலித்தது. இரண்டாவது நாள் பொசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக மக்கள் கூட்டம் திரையரங்குகளில் அலைமோதியது. இதனால் இரண்டாவது நாள் ரூ.8.79 கோடியை படம் வசூலித்தது. மூன்றாவது நாள் ரூ.10.24 கோடியை எட்டியது.

இந்நிலையில், நான்காவது நாளான நேற்றை தினத்தின் வசூலையும் சேர்த்து படம் இதுவரை உலக அளவில் ரூ.50 கோடிக்கும் அதிகமான வசூலை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல கடந்த ஓகஸ்ட் 12ஆம் திகதி திரையரங்குகளில் வெளியான கார்த்தியின் ‘விருமன்’ திரைப்படம் உலக அளவில் இதுவரை ரூ.50.54 கோடியை வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

spot_imgspot_img

More like this
Related

காதார விழிப்புணர்வில் மதத் தலைவர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும்: பிராந்திய பணிப்பாளர் தெரிவிப்பு

கல்முனை பிராந்திய மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும்,...

தாந்தாமலை முருகன் ஆலய பூர்வீக வரலாற்றை சில தமிழ் அரசியல்வாதிகள் திரிவுபடுத்தி சீர்குழைக்கின்றனர்

மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ  முருகன் கோவிலுக்கு வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து வந்து...

மட்டக்களப்பு நீதிமன்றிற்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட பிள்ளையான் உட்பட 3 பேருக்கு 13 வரை விளக்கமறியல்

மட்டக்களப்பில் இடம்பெற்ற 3 கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்