டிக்வெல்ல அரச பாடசாலையின் தரம் 10ல் கல்வி கற்கும் மூன்று பாடசாலை மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டின் பேரில், பாடசாலை இசை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இசை வகுப்புகளுக்குச் சென்ற மூன்று சிறுமிகளை கட்டிப்பிடித்து முத்தமிட்டதாக கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகளின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
14 மற்றும் 15 வயதுடைய மூன்று மாணவிகள் மருத்துவப் பரிசோதனைக்காக சட்ட வைத்திய அதிகாரியிடம் பரிந்துரைக்கப்பட்டனர்.
38 வயதான சந்தேக நபர் மாத்தறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1