ரஷ்ய ஜனாதிபதி புடினின் நெருங்கிய உதவியாளரான அலெக்சாண்டர் டுகின் மகள் சனிக்கிழமை கார் வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார்.
கார் வெடிப்பில் 30 வயதான தர்யா டுகினா இறந்தார் என்று ரஷ்யாவின் செய்தி நிறுவனமான TASS தெரிவித்துள்ளது.
மொஸ்கோ பிராந்தியத்தில் உள்ள போல்ஷியே வியாசெமி கிராமத்தில் டொயோட்டா லாண்ட் க்ரூஸர் பிராடோ வெடித்து சிதறியதில் ஒரு “பெண் சாரதி” கொல்லப்பட்டதை ரஷ்ய செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியது. இந்த தாக்குதல் தொடர்பாக ரஷ்ய சட்ட அமலாக்க அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெடிப்பு நிகழ்ந்தபோது டுகினா ஒரு இலக்கிய விழாவில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தார் என்று ரஷ்ய செய்தி நிறுவனமான பாசா கூறியது.
அவரது தந்தை அலெக்சாண்டர் டுகினும் காரில் பயணிக்கவிருந்தார். ஆனால் இறுதி நேரத்தில் திட்டத்தை மாற்றி, வேறு வாகனத்தில் பின்னால் சென்று கொண்டிருந்தார். அவருக்க முன்பாக மகள் செலுத்திச் சென்ற கார் வெடித்து சிதறியது.
குழந்தைகள் டுஜின் பிளானிரோவல் எஹத் வ்மெஸ்டெ ஸ் டோச்சர்யு, நோ வ் போஸ்லெட்னிய் மொமென்ட் செல் மற்றும் டிருகுயு மஷினு. pic.twitter.com/4wnJ2BmbTz
அலெக்சாண்டர் டுகின் ரஷ்ய சித்தாந்தவாதியாவார். 1990களில் ரஷ்யா வீழ்ச்சியடைந்திருந்த போது, புதிய ரஷ்ய சித்தாந்தந்தை தீவிரமான முன்னெடுத்தவர். புடினுடனான நெருக்கம் காரணமாக அவர் “புடினின் மூளை” என்று பரவலாக அறியப்படுகிறார்.
2016 ஆம் ஆண்டில், “உக்ரைனுடனான போர் தவிர்க்க முடியாதது” என்று டுகின் கூறியதாக கூறப்படுகிறது, அதே நேரத்தில் ரஷ்யா ஏற்கனவே “கிரிமியாவுடன் ஒன்றுபட்டுள்ளது” என்று வலியுறுத்தினார்.
தர்யா டுகின் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு ஆதரவாக பரவலாகப் பேசியிருந்தார். ஜனாதிபதி புடின் உக்ரைன் மீதான “சிறப்பு இராணுவ நடவடிக்கையை” தொடங்கிய பின்னர் மார்ச் மாதம் பிடன் நிர்வாகத்தால் தடைவிதிக்கப்பட்டார்.