அசர்பைஜானின் தேசிய தீயணைப்பு சேவை துறையின் தலைவரின் உதவியாளர் அலுவலகத்தில் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் அந்தரங்க வீடியோக்கள் கசிந்ததை தொடர்ந்து, பணிநீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
அவர் தனது அலுவலகத்தில் உள்ள சேவை கணினியில் இரகசியமாக பதிவு செய்த பல பாலியல் சந்திப்புகளில் தற்போது வெளியாக வீடியோவும் ஒன்றாகும்.
அவசரகால சேவை அமைச்சு அலுவலக கதவை மூடிவிட்டு, தேசிய தீயணைப்பு சேவை சீருடை அணிந்த பெண்ணை முத்தமிட்டு அரவணைக்கும் காணொளி சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியதைத் தொடர்ந்து, ஓகஸ்ட் 18 அன்று, “தீவிர” விசாரணையைத் தொடங்கியதாக சட்டமா அதிபர் அலுவலகம் கூறியது.
அவசரகால சூழ்நிலைகள் அமைச்சகத்தின் தீயணைப்புப் பாதுகாப்பு சேவையின் தலைவரின் உதவியாளரான கேணல் ஜார் மிர்சாயேவ், அலுவலக துஷ்பிரயோகம், ஆபாசப் பொருட்களை சட்டவிரோதமாக விநியோகித்தல் மற்றும் தனியுரிமை மீறல் உள்ளிட்ட சந்தேகத்திற்குரிய கிரிமினல் குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மிர்சாயேவ் “தனது சேவை கணினியில் ஒரு மறைக்கப்பட்ட கமராவை நிறுவியுள்ளார்” என்றும் “தனது பாலியல் ஆசையை திருப்திப்படுத்திக்கொள்ளும் தனிப்பட்ட நோக்கத்துடன்” செயல்பட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
மிர்சாயேவ் தனது பணி கணினியில் ஆறு வருடங்களாக பல “ஆபாச” வீடியோக்களை உருவாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டார்.
2013-2019 காலப்பகுதியில் “அலுவலகத்தில் உடலுறவு மற்றும் பிற வகையான நெருங்கிய உறவுகளின் போது வீடியோ மற்றும் போட்டோ ஷூட்களை எடுத்தார். மேலும் ஓகஸ்ட் 2022 இல் இணையத்தில் சட்டவிரோத ஆபாசப் பொருட்களைப் பரப்பினார் என்று கூறினர்.
பகிரப்பட்ட வீடியோவில் உள்ள நேர முத்திரை அது 2014 இல் பதிவு செய்யப்பட்டதாகக் கூறுகிறது. இந்த வீடியோக்கள் கசிந்ததா அல்லது மிர்சாயேவ் அவர்களால் வெளியிடப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
அவரது நடவடிக்கைகள் அமைச்சகத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியதாக விசாரணையாளர்கள் முடிவு செய்தனர்.
வீடியோவில் உள்ள பெண்ணின் அடையாளம் குறித்து ஆரம்பத்தில் தெளிவாக தெரிய வராவட்டாலும், அந்தப் பெண் அதே அமைச்சகத்தில் உள்ள மற்றொரு துறையின் தலைவர் என்று சமூக ஊடகவாசிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.