கிரிமியாவில் உள்ள ரஷ்யாவின் கருங்கடல் கடற்படையின் தலைமையகத்தின் மீது தாக்குதல் நடத்த முயன்ற ஒரு ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என்று உள்ளூர் அதிகாரி ஒருவர் கூறினார்.
செவாஸ்டோபோலில் உள்ள இந்த கட்டளை மையதட மீது, கடந்த ஒரு மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது தாக்குதல் முயற்சி இதுவாகும்.
செவாஸ்டோபோல் நகரத்தில் உள்ள “கப்பற்படை தலைமையகத்திற்கு சற்று மேலே ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது” என்று நகர ஆளுநர் மிகைல் ரஸ்வோஜேவ் சனிக்கிழமை டெலிகிராமில் எழுதினார். இந்த தாக்குதலின் பின்னணியில் உக்ரைனியப் படைகள் இருப்பதாகக் குற்றம் சாட்டினார்.
“இது கூரையில் விழுந்து தீப்பிடித்தது,” என்று அவர் கூறினார்.குறிப்பிடத்தக்க சேதம் அல்லது உயிரிழப்பு எதுவும் இல்லை.
ஜூலை 31 அன்று, ரஷ்யாவின் கடற்படை தினத்தன்று கருங்கடல் கடற்படையின் மீது உக்ரைனிய ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியதில், ஐந்து பேர் காயமடைந்தனர்.
வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் உக்ரைனிய ட்ரோன் தாக்குதல்களை ரஷ்யாவும் அறிவித்தது.
ரஷ்யாவின் RIA மற்றும் Tass செய்தி நிறுவனங்கள், கிரிமியாவில் உள்ள உள்ளூர் அதிகாரியை மேற்கோள் காட்டி, மேற்கு கிரிமியா துறைமுகமான Yevpatoriya அருகே ரஷ்ய விமான எதிர்ப்புப் படைகள் வெள்ளிக்கிழமை இரவு நடவடிக்கையில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
ஒரு ரஷ்ய இணையதளம் வெளியிட்ட வீடியோ காட்சிகள் தரையில் இருந்து வான் ஏவுகணை இலக்கைத் தாக்குவது போல் தோன்றியது.
கெர்சன் நகரின் கிழக்கே நோவா ககோவ்கா நகரைத் தாக்க அனுப்பப்பட்ட ஆறு உக்ரேனிய ட்ரோன்களை ரஷ்ய விமான எதிர்ப்புப் படைகள் வீழ்த்தியதாக உள்ளூர் அதிகாரியை டாஸ் மேற்கோள் காட்டியது.
கிரிமியாவில் உள்ள ஒரு அதிகாரி, செவஸ்டோபோல் நகரத்தின் மீது குறிப்பிடப்படாத எண்ணிக்கையிலான ட்ரோன்களை பாதுகாப்புப் படையினர் வீழ்த்தியதாகக் கூறினார்.
ரஷ்ய படைகளால் கலைக்கப்பட்ட கெர்சனின் பிராந்திய கவுன்சில் உறுப்பினர் செரி க்லான், “உக்ரைனிய ஆயுதப்படைகள் ரஷ்யர்களை ஒரு மாயாஜால மாலையாக நடத்தினார்கள்” என்று கூறினார்.
ரஷ்யா கைப்பற்றிய பகுதிகளிற்கான விநியோக வழிகளை சீர்குலைக்கும் முயற்சியில் உக்ரைன் சமீபத்தில் ரஷ்ய எல்லைகளுக்குப் பின்னால் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.
கிரிமியாவில் அல்லது ரஷ்யாவிற்குள் நடந்த சம்பவங்கள் குறித்து அதிகாரப்பூர்வ கருத்தை கெய்வ் வெளிப்படுத்தவில்லை. எனினும், நீண்ட தூர ஆயுதங்கள் அல்லது நாசவேலைகளைப் பயன்படுத்தப்படுவதாக உத்தியோகப்பற்றற்ற விதமாக வெளிப்படுத்தி வருகிறது.
வெள்ளியன்று உக்ரைனிற்கான ஆயுத உதவிப்பொதி பற்றி அமெரிக்கா அறிவித்தது. 775 மில்லியன் டொலர் பெறுமதியான இந்த பொதியில் ScanEagle கண்காணிப்பு ட்ரோன்கள், கண்ணிவெடி-எதிர்ப்பு வாகனங்கள், கவச எதிர்ப்பு சுற்றுகள் மற்றும் ஹோவிட்சர் ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்குவதாக முதல்முறையாக அமெரிக்கா கூறியது.
ரஷ்யாவின் துணை வெளியுறவு மந்திரி செர்ஜி ரியாப்கோவ் வெள்ளியன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட கருத்துக்களில், “அமெரிக்கா மற்றும் அதன் நேட்டோ நட்பு நாடுகளால் வெளிப்படையாக ஊக்குவிக்கப்பட்ட மோதலின் விரிவாக்கம்” காரணமாகவே கிரிமியாவில் தாக்குதல் செய்யும் வசதிகள் பற்றிய உக்ரைனிய அதிகாரிகளின் அறிக்கைகள் வெளியிடப்படுவதாக கூறினார்.