25 C
Jaffna
January 22, 2025
Pagetamil
கிழக்கு

புதையலில் எடுக்கப்பட்ட கறுப்பு தங்கத்துடன் ஒருவர் கைது!

புதையல் அகழ்வில் தோண்டி எடுக்கப்பட்ட தங்கம் என கூறி விற்பனை செய்ய முயன்ற சந்தேக நபர் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோரக்களப்பு குளத்திற்கருகில் தகவல் ஒன்றிற்கு அமைய சம்பவ தினமான வெள்ளிக்கிழமை(19) மாலை கல்முனை விசேட அதிரடிப்படையினரால் இக்கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

24 வயதுடைய கோமாரி பகுதியை சேர்ந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் வசம் இருந்து ரூபா 20 இலட்சம் பெறுமதியான 350 துண்டுகள் அடங்கிய 113 கிராம் 180 மில்லி கிராம் எடையுடைய ஒரு தொகுதி கறுப்பு பொன்நிற கற்கள் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கையானது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை அதிகாரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சில்வெஸ்டர் விஜேசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.சி வேவிடவிதான ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்க தலைமையிலான உப பொலிஸ் பரிசோதகர் எச்.ஜி.பி.கே நிசங்க உள்ளிட்ட பொலிஸ் சார்ஜன்ட் பண்டார (13443) பொலிஸ் கன்ஸ்டபிள்களான சுபசிங்க (14235) புத்திக (40557) அமரசேகர (67810) இந்துநில் (66833) ராஜபக்ச (24812) அதிகாரிகள் இந்நடவடிக்கையை முன்னெடுத்து சந்தேக நபரை கைது செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட நபர் சான்று பொருட்களுடன் திருக்கோவில் பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர் நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

-பா.டிலான்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அலஸ்தோட்டத்தில் பாரிய விபத்து

east tamil

கிழக்கு மாகாண ஆளுநரின் மக்கள் தினம்

east tamil

ஜப்பானிய தூதுவரும் கிழக்கு மாகாண ஆளுநரும் சந்திப்பு

east tamil

மட்டக்களப்பில் வெள்ளம்: 10,031 பேர் தஞ்சம், 3737 குடும்பங்கள் பாதிப்பு

east tamil

திருடப்பட்ட மாட்டிறைச்சியுடன் ஒருவர் கைது – வெட்டுவதற்கான ஆயுதங்களும் மீட்பு!

east tamil

Leave a Comment