இறுக்கிக் கட்டிப்பிடித்ததால் நண்பியின் விலா எலும்புகள் உடைந்தன: இழப்பீடு வழங்க நண்பனிற்கு உத்தரவு!

Date:

சீனாவில் இளம்பெண்ணொருவரை, அவரது நண்பர் இறுக்கமாக கட்டிப்பிடித்ததால் இழப்பீடு செலுத்தியுள்ளார்.

நண்பரின் கட்டிப்பிடியில், அந்த இளம் பெண்ணின் மூன்று விலா எலும்புகள் உடைத்து விட்டன. இதற்கான இழப்பீடு கோரி அந்தப் பெண், கட்டிப்பிடித்தவருக்கு எதிராக நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கிலேயே இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சீனாவின் Hubei மாகாணத்தில் Yueyang நகரைச் சேர்ந்த பெண், மே 2021 இல் சக ஊழியருடன் பேசிக் கொண்டிருந்தபோது, ஒரு ஆண் சக ஊழியர் அவரை நெருங்கி இறுக்கமாக அணைத்துக் கொண்டார். அவரது கட்டிப்பிடி இரும்புப்பிடியாக இருந்ததால் அந்த யுவதி வலியால் வலியால் கத்தியதாகக் கூறப்படுகிறது.

நண்பரின் கட்டிப்பிடியின் பிறகு அந்தப் பெண், மார்பில் அசௌகரியத்தை அனுபவித்துள்ளார். ஆனால் அது தற்காலிகமானது என நினைத்து பேசாமல் இருந்து விட்டார். மாலை பணிமுடிந்து வீடு திரும்பியிருக்கிறார். இரவு வலி அதிகமாக இருக்கவே, சூடு நீரில் ஒத்தடம் வைத்துக்கொண்டு படுத்திருக்கிறார்.

இருப்பினும், ஐந்து நாட்களுக்குப் பிறகு அவரது மார்பில் வலி தீவிரமடைந்தபோது அவர் மருத்துவமனைக்குச் சென்றார்.

எக்ஸ்ரே பரிசோதனையில் அவருக்கு மூன்று விலா எலும்புகள் உடைந்திருப்பது தெரியவந்தது: ஒரு இடது விலா எலும்பும் இரண்டு வலது விலா எலும்புகளும் உடைந்திருந்தன. அந்தப் பெண் தனது மருத்துவச் செலவுக்கு பணம் செலுத்த வேண்டியிருந்ததாலும், வேலையில் இருந்து விடுப்பு எடுக்கவும் நிர்ப்பந்திக்கப்பட்டதால் வருமானம் இல்லாமல் போனது.

அந்த பெண் தனது மருத்துவக் கட்டணங்களுக்கான இழப்பீட்டைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்த கட்டிப்பிடித்த ஆண் சக ஊழியரைச் சந்தித்துள்ளார். இருப்பினும், அவர் தனது அணைப்பு அன்பானதாக இருந்தது என்றும், அவர் கட்டிப்பிடித்ததால் விலா எலும்பு உடைந்தது என்பதற்கு பெண்ணிடம் எந்த ஆதாரமும் இல்லை என்றும் வாதிட்டதால் அவர்களால் ஒரு தீர்வுக்கு வர முடியவில்லை.

இதையடுத்து அந்தப் பெண் யுன்சி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். தனது விலா எலும்புகள் உடைந்ததால் ஏற்பட்ட செலவிற்கு, இழப்பீடு கோரினார்.

”அந்த நபர் கட்டிப்பிடித்ததற்கும், எலும்பு உடைந்ததற்கும் இடைப்பட்ட காலத்தில் அந்தப் பெண்ணில் உடல் செயல்பாட்டால் எலும்பு உடைந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை எனவே, இளம்பெண்ணை இறுக அணைத்து அவர் எலும்புகள் உடைவதற்கு காரணமாக இருந்த இளைஞர் 10,000 யுவான் (அண்ணளவாக 1,473 டொலர்) இழப்பீடாக வழங்க சக ஊழியருக்கு உத்தரவிடப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளன: ட்ரம்ப்

இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்...

தானசாலை வரிசையில் நின்றவர்களை மோதிக்கொன்ற வாகன சாரதி மீது கொலைக்குற்றச்சாட்டு!

மீகொடவில் உள்ள வெசக் தானசாலையில் வரிசையில் நின்றிருந்த மக்கள் கூட்டத்தின் மீது...

‘நீதிபதி இடமாற்றத்துடன் எனக்கு தொடர்பேயில்லை’: மறுக்கிறார் ஆளுனர்!

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியின் இடமாற்றத்துக்கும், வடக்கு மாகாண ஆளுநருகும் எந்தவொரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்