நடிகை நமிதா இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். இதனை நமிதா தனது இன்ஸ்டாகிராம் மூலம் தனது ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.
‘எனக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. கிருஷ்ணாஷ்டமி நாளில் (வெள்ளிக்கிழமை) இந்த நற்செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. உங்கள் அன்பும் ஆசியும் எப்போதும் எங்கள் மீது இருக்கட்டும். மருத்துவமனை ஊழியர்களுக்கு எனது சிறப்பு நன்றி. எனது கர்ப்பப் பயணத்தின் மூலம் என்னை வழிநடத்தி எனது குழந்தைகளை இந்த உலகிற்கு கொண்டு வந்ததற்காக நான் உங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன்,’ என்று அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிப் படங்களில் நடித்து, மிகக் குறுகிய காலத்தில் முன்னணி நாயகியான நமிதா, 2017 இல், அவர் தனது காதலர் வீரேந்திர சவுத்ரியை மணந்தார்.
நமீதாவுக்கு பிரபலங்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
வீடியோவை பார்வையிட
https://www.instagram.com/reel/ChcHIn-jTz1/?utm_source=ig_web_copy_link