கூகிள் நிறுவனம் அதன் குரோம் (Chrome) தளத்திற்கான பாதுகாப்பு மேம்பாட்டு அம்சங்களைச் செவ்வாய்க்கிழமையன்று (16) வெளியிட்டது.
கூகிள் குரோம் தளத்தில் ஏற்பட்டுள்ள ‘அதிக பாதிப்புத்தரக்கூடிய கோளாற்றைப்” பயன்படுத்தி இணைய ஊடுருவிகள் செயல்படலாம் என்று வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.
கூகிள் நிறுவனம் Mac, Linux கணினிகளுக்கான Chrome 104.0.5112.101; Windows கணினிகளுக்கான Chrome 104.0.5112.102/101 ஆகிய அண்மைப் பதிப்புகளை வெளியிட்டது. அதன் குரோம் தளத்திற்கான அண்மைப் பதிப்புகள் குறித்து கூகிள் நிறுவனம் மேல்விவரம் அளிக்கவில்லை.
தளத்தின் அண்மைப் பதிப்புகளைச் சேர்த்துக்கொள்ளும்படி வல்லுனர்கள், பயனீட்டாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பயனீட்டாளர்கள் தளத்தின் தானியக்க மேம்பாட்டு அம்சத்தைத் தேர்ந்தெடுப்பது நல்லது என்றும் கூறப்பட்டது. அந்த அம்சத்தை குரோம் தளத்தில் பொருத்தினால் அது உடனடியாகத் தானாகவே மென்பொருளுக்கான அண்மைப் பதிப்புகளைப் பதிவிறக்கம் செய்து சேர்த்துக்கொள்ளும்.