வெளிநாட்டிற்கு பணம் சம்பாதிப்பதற்காக சென்ற ஐந்து பிள்ளைகளின் தாய் ஒருவர், நாடு திரும்பி பேஸ்புக் காதலனுடன் வசித்து வந்த நிலையில், பொலிசாரின் தலையீட்டால் அவரது கணவர் மற்றும் பிள்ளைகள் மீண்டும் அழைத்துச் சென்ற சம்பவம் மினுவாங்கொடை பொலிஸ் பிரிவில் நடைபெற்றுள்ளது.
இவர் பொலன்னறுவை பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தாயாவார். இவரது கணவருக்கு 49 வயது. விவசாயி. நாட்டின் நிலைமை மோசமாக தொடங்கியதையடுத்து வாழ்க்கை நடத்த முடியாததால், ஓரு வருடம் எட்டு மாதங்களுக்கு முன், ஓமன் நாட்டுக்கு வேலைக்குச் சென்றார்.
அவர் வெளிநாடு சென்ற பின்னர் தாய்வழி பராமரிப்பு இல்லாததால் அவரது இரண்டு மகள்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும் காவல்துறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் ஓமானில் பணிபுரிந்து கொண்டிருந்த போது, மினுவாங்கொடை பிரதேசத்தில் வசிக்கும் 28 வயதுடைய இளைஞருடன் பேஸ்புக் மூலம் காதல் வயப்பட்டுள்ளார். தனக்கு திருமணமாகி ஐந்து பிள்ளைகளின் தாய் என்பதை அந்த இளைஞனிடம் சொல்லவில்லை.
கடந்த பெப்ரவரி மாதம் ஓமானில் இருந்து இலங்கை வந்த இந்த பெண் மினுவாங்கொட பிரதேசத்தில் வசிக்கும் இளைஞனின் வீட்டிற்கு வந்து அவருடன் குடும்ப வாழ்க்கையை கழித்துள்ளார்.
மனைவி நாடு திரும்பியதையும், ஆனால் வீடு வராததையும் அறிந்து கொண்ட கணவன், மனைவியின் நண்பிகள் மூலம், விடயத்தை தெரிந்து கொண்டார்.
மினுவாங்கொடையில் மனைவி பேஸ்புக் காதலனுடன் வசித்து வருவதை கண்டு பிடித்த கணவன், மினுவாங்கொடை பொலிஸில் முறைப்பாடு செய்தார்.
இதையடுத்து, ஐந்து பிள்ளைகளின் தாயையும் இளைஞனையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து பொலிசார் விசாரணை மேற்கண்டனர்.
பொலிஸ் விசாரணை வரை, தனது பேஸ்புக் காதலிக்கு திருமணமானதோ, 5 பிள்ளைகள் உள்ளதோ பேஸ்புக் காதலனிற்கு தெரிந்திருக்கவில்லை. பொலிஸ் விசாரணையில் வெளியான தகவல்களால்
மினுவாங்கொடை பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் உப பொலிஸ் பரிசோதகர் எம். கே. திருமதி.ரமணி இருதரப்பிலும் முன்வைத்த உண்மைகளின் பின்னர், கணவன் மனைவியையும் பிள்ளைகளின் தாயையும் ஏற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்ததோடு, தன்னுடன் வாழும் பெண் திருமணமாகி ஐந்து பிள்ளைகளின் தாய் என்பதை அறிந்ததும், இளைஞனும் தனது அந்த பெண்ணை அவரது கணவர் மற்றும் குழந்தைகளிடம் ஒப்படைக்க தயாராக இருந்தது, பின்னர் இரு தரப்பினரும் தனித்தனியாக காவல் நிலையத்தை விட்டு வெளியேறினர்