யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுக்குழு ரௌடி என்ற சந்தேகத்தில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்ட இரண்டு இடங்களில் கடந்த 14ஆம் திகதி வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆவா குழு, தனுரொக் குழு ரௌடிகள் ஏட்டிக்கு போட்டியாக இந்த வாள்வெட்டில் ஈடுபட்டதாக அறியப்படுகிறது.
இரண்டாவது வாள்வெட்டில் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இளைஞன் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு மானிப்பாய் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
கிளிநொச்சியை சேர்ந்த 28 வயதான இளைஞனே கைதானார். அவர் ஆவா ரௌடிக்குழு உறுப்பினர் என நம்பப்படுகிறது.
அவர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1