25.8 C
Jaffna
December 22, 2024
Pagetamil
இலங்கை

யாழ்ப்பாணத்திற்கு கடமைக்கு வந்த சிப்பாய் தூக்க கலக்கத்தில் புகையிரதத்திலிருந்து இறங்கியதால் விபத்து!

அசந்து தூக்கியதால் இறங்க வேண்டிய புகையிரத நிலையத்தை தவற விட்டு, மற்றைய புகையிரத நிலையத்தில் அவசரமாக இறங்க முற்பட்ட இராணுவ சிப்பாய் காயமடைந்த நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கடமையாற்றும் எஸ். விஜயசிங்க (26) எனும் இராணுவ சிப்பாயே காயமடைந்துள்ளார்.

குறித்த சிப்பாய் தனது ஊரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கடமைக்காக கொழும்பு – யாழ்ப்பாணம் கடுகதி புகையிரதத்தில் வந்துள்ளார்.

யாழ்ப்பாண நிலையத்தில் இறங்க வேண்டியவர், தூக்கத்தினால் அதனை தவற விட்டுள்ளார். திடீரென தூக்கத்தினால் எழுந்தவர் புகையிரதம் சுன்னாகம் புகையிரத நிலையத்தில் தரித்து நிற்பதனை அவதானித்து, தூக்க கலக்கத்துடன் அவசரமாக இறங்க முற்பட்ட நிலையில் புகையிரதத்தில் இருந்து தவறி விழுந்து காயமடைந்துள்ளார்.

அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நாளை முதல் விசேட போக்குவரத்து நடவடிக்கை

Pagetamil

பிரித்தானியர் ஒருவரால் வந்த வினை: இலங்கையில் பேராபத்தாக உருவெடுத்துள்ள ஆபிரிக்க நத்தைகள்!

Pagetamil

2025 ஆம் ஆண்டின் பொது விடுமுறை நாட்களின் விபரம்!

Pagetamil

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சீன கடற்படையின் மருத்துவ கப்பல்

east tamil

தலைவன் பிறந்த ஊர் என்பதால் நிராகரிப்பா?: வல்வெட்டித்துறை மக்கள் போராட்டம்!

Pagetamil

Leave a Comment