24.8 C
Jaffna
January 8, 2025
Pagetamil
இலங்கை

ரணில் கடந்த காலத்திலிருந்து பாடம் படித்ததாக தெரியவில்லை; ‘பழையவர்களே’ சுற்றியிருக்கிறார்கள்: ஓமல்பே சோபித தேரர்!

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மக்கள் போராட்டத்தின் மூலம் ஜனாதிபதி பதவியை அடைந்தவர். ஆனால், அவர் கடந்த காலத்திலிருந்து எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்றும் தெரிகிறது என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

தேசிய சொத்துக்களை அபகரித்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் ஊழல்வாதிகளை அமைச்சர்களாக நியமிக்கக் கூடாது எனவும் வலியுறுத்தினார்.

புதிய நடைமுறைகளுக்குப் பதிலாக, ஜனாதிபதி பழைய நடைமுறைகளைத் தொடர்வதாகக் காணப்படுகிறது. அவர் தனது பழைய அமைச்சர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவுடன் இதே சுயநலம் மற்றும் மனிதாபிமானமற்ற அரசியல் நிகழ்ச்சி நிரலைத் தொடர்கிறார்.

எனவே, பழைய நடைமுறைகளை கைவிட்டு, திருடர்களை தண்டித்து, நாட்டின் தேசிய செல்வத்தை திருடியவர்களிடம் இருந்து மீட்க வேண்டும் என அவருக்கு கடுமையாக அறிவுறுத்துகிறோம் என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கல்கிசை துப்பாக்கிச்சூட்டு பின்னணி வெளியானது!

Pagetamil

விளையாட்டு வினையாது: வெளிநாட்டிலுள்ள கணவனை பயமுறுத்த இளம் பெண் ஆடிய நாடகத்தால் நேர்ந்த சோகம்!

Pagetamil

பருத்தித்துறை கடலில் மீனவர்களுக்கான முன்னெச்சரிக்கை அறிவிப்பு

east tamil

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் ஒராங்குட்டான் உயிரிழப்பு

east tamil

வெளிநாடு செல்லும் கனவுக்காக போதைப்பொருள் விற்ற மாணவன் கைது

east tamil

Leave a Comment