கருவலகஸ்வெவ எரமுடுகஸ்வெவ பகுதியில் நபர் ஒருவரை சுட்டுக் காயப்படுத்திய சந்தேகத்தின் பேரில் வனவிலங்கு கட்டுப்பாட்டாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கருவலகஸ்வெவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தோட்டா தாக்கியதில் காயமடைந்த கருவலகஸ்வெவ குடமடவச்சிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் பாதுகாப்பு அலுவலகத்தைச் சேர்ந்த வனவிலங்கு அதிகாரிகள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1