25.6 C
Jaffna
January 22, 2025
Pagetamil
இலங்கை

மடு மாதா ஆவணி மாத பெருவிழா!

மன்னார் மருதமடு அன்னையின் ஆவணி மாத பெருவிழா இன்றைய தினம் திங்கட்கிழமை (15) காலை சிறப்பாக இடம்பெற்றது.

இன்று திங்கட்கிழமை காலை 6.15 மணி அளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில்,அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபேட் அன்ராடி ஆண்டகை, கொழும்பு உயர் மறை மாவட்டத்தின் துணை ஆயர் மேதகு அன்ரன் ரஞ்சித் பிள்ளை நாயகம் ஆண்டகை ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலி யாக ஒப்புக்கொடுத்தனர்.

இந்த நிலையில் இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் பல இலட்சக்கணக்கான மக்கள் அன்னையின் ஆசீர்வாதத்தை வேண்டி மடு திருத்தலத்திற்கு வருகை தந்தனர்.

திருவிழா திருப்பலியை தொடர்ந்து மடு அன்னையின் திருச்சொரூப பவனி இடம் பெற்ற தோடு மடு அன்னையின் ஆசி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

குறித்த திருவிழா திருப்பலியில் மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார் ,மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் பி.கிறிஸ்து நாயகம் அடிகளார், அருட்தந்தையர்கள்,அருட்சகோதரிகள், அகில இலங்கை கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஸ்தாபகர் அருட்கலாநிதி எஸ். சந்ரு பெர்னாண்டோ, அரசியல் பிரதிநிதிகள், திணைக்கள தலைவர்கள் உட்பட நாட்டின் பல பாகங்களிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மடு அன்னையின் ஆசி பெற்றனர்.

கடந்த வருடம் நாட்டில் ஏற்பட்டிருந்த கோவிட் தொற்று காரணமாக ஆலயத்திற்கு செல்ல பக்தர்கள் மட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இந்த வருடம் அதிகளவான மக்கள் நேர்த்திக்கடன்களை நிறைவு செய்ய நடைபயணம் மேற்கொண்டு வருகை தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வட்டுவாகல் பாலத்திற்கான நிதி ஒதுக்கீடு உறுதி – ரவிகரன் எம்.பி.

east tamil

யாழ் கலாசார மத்திய நிலையத்தின் பெயர் மாற்றம்: இந்திய துணைத்தூதருக்கு சீ.வீ.கே கடிதம்!

Pagetamil

‘அரிசி ஆலைகள் இராணுவக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும்’: ஜனாதிபதி எச்சரிக்கை!

Pagetamil

பாராளுமன்றத்தில் உணவுகளின் விலைகள் அதிகரிக்கும்!

Pagetamil

பொலிஸ் தடுப்புக்காவலில் உயிரை மாய்த்த வவுனியா இளம்பெண்!

Pagetamil

Leave a Comment