26 C
Jaffna
February 3, 2025
Pagetamil
இலங்கை

பட்டமளிப்பு!

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தோடு, தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து நடாத்திய வட மாகாணத்தின் ஆறாவது பட்டமளிப்பு விழா யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் அமைந்துள்ள பூமாரி மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (14) இடம்பெற்றது.

நிகழ்வில், இளங்கலைமாணி தமிழியல் சிறப்பு பட்டம் பெற்ற 107 மாணவர்களுக்கு பட்டங்களை யாழ் பல்கலைக்கழகத்தின் ஊடகத்துறை தலைவர் பேராசிரியர் சி.ரகுராம் வழங்கிவைத்தார்.

மேலும், தமிழியல் மேற்பட்டய கற்கையை மேற்கொண்ட 91 மாணவர்களுக்கான சான்றிதழ்களும், பட்டய கற்கையை மேற்கொண்ட 87 மாணவர்களுக்கான சான்றிதழ்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது, இளங்கலைமாணி தமிழியல் சிறப்பு தேர்வில் முதல் நிலையுடன் சிறப்பு தேர்ச்சி பெற்ற நால்வருக்கு “இராஜராஜ சோழன் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நிகழ்வில், யாழ் பல்கலைக்கழகத்தின் ஊடகத்துறை தலைவர் பேராசிரியர் கலாநிதி சி.ரகுராம், வடமாகாண சிரேஷ்ட சமூதாய சீர்திருத்த உத்தியோகத்தர் மொகமட் அன்வர் மொகமட் அனஸ், தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் வடக்கு மற்றும் மத்திய மாகாண இயக்குநர் இ.கோபிகிருஷ்ணா, பாரதி இன்ரிரியூட் இயக்குநரும் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் வட மாகாண இணைப்பாளரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான க.ரஜனிகாந்தன், நுணாவில் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்புநிலைய உரிமையாளர் வை.சிவராசா ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

எல்லை தாண்டிய 10 தமிழக மீனவர்கள் கைது!

Pagetamil

பாவித்த வாகன சந்தை வீழ்ச்சியடையும்!

Pagetamil

விடுதியில் வெளிநாட்டுப் பெண் உயிரிழப்பு

east tamil

இலங்கைக்கு இந்திய அரசின் நிதி ஒதுக்கீடு

east tamil

போதைப்பொருளை பிடிக்க புதிய தொலைபேசி இலக்கம்

east tamil

Leave a Comment