26.8 C
Jaffna
December 14, 2024
Pagetamil
இந்தியா

செருப்பு பத்திரமாக உள்ளது; எறிந்தவர் வந்து வாங்கிக் கொள்ளலாம்!

தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த இராணுவ வீரர் லட்சுமணன் உடல் இன்று காலை தனி விமானம் மூலம் அவரது உடல் ஐதராபாத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் நேற்று நண்பகல் 12.15 மணிக்கு மதுரைக்கு கொண்டு வரப்பட்டது.

வீரமரணமடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கார் மீது பா.ஜ.க-வினர் நேற்று காலணியை வீசினர். இந்த சம்பவம் தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தி.மு.க கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக நேற்று 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மேலும் கூறியிருப்பதாவது:-

நேற்றைய நிகழ்வுகளைப் பற்றி நான் பின்னர் ஒரு சமயத்தில் கூறுவேன். ஆனால் இப்போதைக்கு “சிண்ட்ரெல்லா பழைய விமான நிலைய முனையத்தில்” கட்சி உறுப்பினர்கள் 10 பேருடன் அந்த பெண்மணியை “பாதுகாப்பான” பகுதிக்குள் நூற்றுக்கணக்கான மீட்டர்கள் “அனுமதித்தது யார் என்று தெரியவில்லை. இருப்பினும் அவர் தன்னுடைய செருப்பைத் திரும்பப் பெற வேண்டும் என்று விரும்பினால் தாராளமாக பெற்றுக்கொள்ளலாம். என் ஊழியர்கள் அதை உங்களுக்காகச் பாதுகாப்பாக வைத்துள்ளனர் என்று பதிவிட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தமிழக காங்கிரஸ் முக்கியத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்

Pagetamil

நடைபயிற்சிக்கு தனியாக சென்ற மனைவிக்கு முத்தலாக்

Pagetamil

‘பொன்வேலின் முதல் ஓட்டு விஜய்க்கே!’ – மொத்தமாக தவெக-வில் கலந்த மாரி செல்வராஜின் ‘வாழை’ கிராமம்

Pagetamil

அசைவ உணவை கைவிடும்படி சைக்கோ தனமாக பலவந்தப்படுத்திய காதலன்: 25 வயதான விமானி விபரீத முடிவு!

Pagetamil

புதிய காதலியுடன் திருமணம்; லிவ் இன் பார்ட்னரை 40 துண்டுகளாக வெட்டியெறிந்த இறைச்சிக்கடைக்காரன்!

Pagetamil

Leave a Comment