மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் அரசாங்க அமைச்சர்களுக்கு எதிராக எழுப்பப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளை குறிப்பிடும் வகையில் தமிழ் சொற்றொடரைப் பயன்படுத்தினார்.
இன்று பாராளுமன்றத்தில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்த கருத்து தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்க இந்த வாசகத்தை பயன்படுத்தினார்.
தான் கூறுவதில் தவறிருந்தால் திருத்தும்படி மனோகணேசன் எம்.பியிடம்தெரிவித்து, சாத்தான் வேதம் ஓதுகிறது என குறிப்பிட்டர்.
64 மில்லியன் ரூபா கோரி வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஜூன் மாதம் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஊழலை தடுப்பது குறித்து பேசியதை தொடர்ந்தே இதனை தெரிவித்தார்.
#அனுர_திசாநாயக்க#අනුර_දිසානායක
தமிழ் கூற்று ஒன்று இருக்கிறது. நான் சொல்வது பிழையாயின் என்னை திருத்துங்கள் #மனோ_கணேசன் அவர்களே..!
"சாத்தான் வேதம் ஓதுகிறது". சரியா..?
<இன்று பாராளுமன்றத்தில்> pic.twitter.com/QVVQoNrkg3— Mano Ganesan (@ManoGanesan) August 12, 2022