நடிகை யாஷிகா ஆனந்த், நிரூப் உடனான பிரிவு குறித்து பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.
துருவங்கள் பதினாறு, கவலை வேண்டாம் உள்ளிட்ட படங்களில் நடித்த யாஷிகா ஆனந்த், தனது கிளாமரான நடிப்பால் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தவர். அதன்பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான யாஷிகா கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மோசமான கார் விபத்து ஒன்றில் சிக்கினார். இந்நிலையில் யாஷிகா தனது காதல் பிரிவு குறித்து பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த ஆண்டு ஜூலை 25ம் தேதி அதிகாலை ஒரு மணி அளவில் நண்பர்களுடன் பார்ட்டி ஒன்றிற்கு சென்றுவிட்டு புதுச்சேரியில் இருந்து காரில் சென்னை நோக்கி வந்துள்ளார். காரில் இருந்த அனைவரும் நிறை போதையில் இருந்தனர். அதிவேகமாக வந்த யாஷிகாவின் கார் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சூளேறிக்காடு என்ற பகுதி அருகே கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் யாஷிகா ஆனந்தின் தோழியான ஐதராபாத்தைச் சேர்ந்த பெண் இன்ஜினியர் வள்ளி செட்டி பவணி விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யாஷிகாவுக்கு கால் முறிவு ஏற்பட்டது. அதனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யாஷிகா சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார். இந்நிலையில் பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் யாஷிகாவின் முன்னாள் காதலர் நிரூப் கலந்து கொண்டார்.
இவர் சமீபத்தில் யாஷிகாவுடன் பிரேக் அப் செய்தது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் “இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பினோம், காதலர்களாக இருந்தோம், பிரண்ட்ஸாகவும் இருந்தோம், நமது உறவு பற்றி சொல்லி ஸ்டேட்டஸ் வைத்துக்கொள்ள முடியவில்லை என்றாலும் எப்போதும் போல் தான் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய யாஷிகா, நல்ல டயலாக் டெலிவரி நான் சொன்ன டயலாக்கை அப்படியே அவனுடைய டயலாக் போல் பேசியுள்ளான்.
ஒரு பாய் ஃபிரண்ட் அல்லது கேர்ள் ஃபிரண்ட் இருப்பது லவ் கிடையாது. அதை லவ் என்றே சொல்ல முடியாது. முதுகில் குத்தினாலும் அவர்களுக்கு நல்லது செய்து விட்டு போக வேண்டும். பிரேக்கப்பிற்கு நிறைய காரணம் இருக்கு. அதில் முக்கியமான மனது காயப்பட்டு, உடைந்து போனது தான் என தெரிவித்துள்ளார்.