25.4 C
Jaffna
December 24, 2024
Pagetamil
உலகம்

ஊழல் வழக்கில் சிக்கிய சாம்சங் உரிமையாளருக்கு பொது மன்னிப்பு: தென் கொரிய அரசு உத்தரவு

ஊழல் வழக்கில் சிக்கிய சாம்சங் உரிமையாளருக்கு தென் கொரிய ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.

சாம்சங் நிறுவனத்தின் உரிமையாளர் லீ ஜே யங், உலகின் 278வது பணக்காரராவார். கடந்த 2021 ஜனவரி மாதம் இவர் மீதான ஊழல் குற்றச்சாட்டு நிரூபணமானது. இதனைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த ஓகஸ்ட் 2021ல் பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் தென் கொரிய ஜனாதிபதி தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி லீ ஜே யங்கை வழக்கில் இருந்து விடுவித்துள்ளார். சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழலில், தென் கொரிய பொருளாதாரத்தின் வளர்ச்சியை உறுதிப்படுத்தும் வகையில் லீ ஜே யங்குக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

லீ ஜே யங் தொழில்நுட்பத் துறையில் முதலீடுகளைப் பெருக்கி வேலை வாய்ப்புகளை உருவாக்கி பொருளாதாரத்தை சீரான வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல உதவுவார் என்று தென் கொரிய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

லீ உடன் சேர்த்து மொத்தம் மூன்று தொழிலதிபர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. லாட்டே குழும நிர்வாகி சிங் டாங் பின்னுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் கடந்த 2018ஆம் ஆண்டு ஊழல் வழக்கில் தண்டனை பெற்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஜனாதிபதியாக இருந்தால்தான் கணவன்: சிரியாவிலிருந்து தப்பியோடிய ஆசாத்திடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி!

Pagetamil

உகண்டாவை உலுக்கும் டிங்கா டிங்கா வைரஸ்: இந்த வைரஸ் தொற்றினால் தொடர்ந்து நடனமாடிக் கொண்டேயிருப்பீர்கள்!

Pagetamil

நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கம்!

east tamil

பிரான்ஸை உலுக்கிய பாலியல் வல்லுறவு வழக்கு: சொந்த மனைவியை கொடூரமான பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய கணவன், 50 ஆண்களுக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

துரோகம் செய்த காதலி கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்கத் தேவையில்லை: காதலனுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு!

Pagetamil

Leave a Comment