கடந்த ஓகஸ்ட் மாதம் 2ஆம் திகதி கொட்டிகாவத்தை முல்லேரியா பிரதேச சபை உறுப்பினர் சுமுது ருக்ஷான் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபருக்கு தனது வீட்டை வாடகைக்கு வழங்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போதே மேல் மாகாண-தெற்கு குற்றப் பிரிவினரால் நுகேகொடையில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்து சுமார் 7 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் முல்லேரியாவைச் சேர்ந்த 23 வயதுடையவர்.
அவர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
மேல்மாகாணம்-தெற்கு குற்றப்பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1