ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றம் தொடர்பில் தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவித்து நீதிமன்றில் சத்தியக் கடதாசி சமர்ப்பித்ததன் பின்னர் ஜனாதிபதியின் மன்னிப்பு பொருத்தமானது என பரிந்துரைக்கப்பட்டதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
ரஞ்சன் ராமநாயக்க நீண்டகாலமாக தண்டனை அனுபவித்துள்ளதுடன், நல்ல செயல்களைச் செய்து, சமூகத்திற்குப் பங்களிக்கக் கூடியவர் என்பதாலேயே ஜனாதிபதியின் மன்னிப்பு நியாயமானது என அரசாங்கம் நம்புவதாக விஜயதாச ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.
இந்த நடவடிக்கையின் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த சட்டமா அதிபரின் ஆலோசனை மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தின் அறிக்கை பெறப்பட்டதாகவும், அனைத்து விடயங்களையும் கருத்திற்கொண்டு நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு வழங்குவது பொருத்தமானது என பரிந்துரைக்கப்பட்டதாக விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
நீதிமன்றத்தை அவமதித்தமைக்காக ரஞ்சன் ராமநாயக்கவுக்கு வழங்கப்பட்ட தண்டனையால் நீதிமன்றத்தை குறைத்து மதிப்பிடாத வகையில் மன்னிப்பு வழங்கப்பட வேண்டுமென விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.