நடிகை நயன்தாராவுக்கு திடீர் வாந்தி, தலைச்சுற்று ஏற்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றார். அவரது இந்த நிலைமைக்கு கணவர் விக்னேஷ்தான் காரணமென்பது தெரிய வந்துள்ளது.
நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் 7 ஆண்டு லிவ்விங் டூ கெதருக்கு பிறகு கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இதனை தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவில், கேரளாவில் உள்ள பழமை வாய்ந்த கோவில்கள் என விசிட் அடித்தனர்.
பிறகு இருவரும் தாய்லாந்தில் ஹனிமூன் கொண்டாடினர். சுமார் ஒரு வாரம் தாய்லாந்தில் ஹனிமூன் கொண்டாடிய விக்கி- நயன் ஜோடி தங்களின் ரொமான்டிக் போட்டோக்களையும் ஷேர் செய்தனர். பின்னர் ஊர் திரும்பிய அவர்கள் தங்களின் வேலைகளில் கவனம் செலுத்தி வந்தனர்.
இந்நிலையில் நடிகை நயன்தாரா நேற்று வாந்தி மயக்கம் என திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நயன்தாரா சிகிச்சை மற்றும் சில மணி நேர கண்காணிப்புக்கு பிறகு வீடு திரும்பியுள்ளார்.
நயன்தாராவின் வாந்தி மயக்கத்திற்கு விக்னேஷ் சிவன்தான் காரணமென கூறப்படுகிறது. விக்னேஷ் சிவன் வெரைட்டியாக எதையோ சமைத்து கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்ட நயன்தாராவுக்கு அந்த உணவு ஒவ்வாமையால் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.
நயன்தாராவுக்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவலை கேட்ட ரசிகர்கள் பதறிவிட்டனர். அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.