ஜூலை 13ஆம் திகதி பொல்துவ சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது திருடப்பட்டதாக நம்பப்படும் கண்ணீர் புகை குண்டுகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பத்தரமுல்லை பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தின் போது முச்சக்கரவண்டியில் கண்ணீர் புகை குண்டுகளை பொலிசார் கொண்டு வந்ததாகவும், போராட்டக்காரர்கள் சில கண்ணீர் புகைக்குண்டுகளை எடுத்துக் கொண்டு சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் பலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
வெலிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1