26.6 C
Jaffna
December 20, 2024
Pagetamil
முக்கியச் செய்திகள்

இலங்கையின் எதிர்ப்பையும் மீறி அடாத்தாக உள்நுழைகிறது சீனக்கப்பல்?: ‘கடன்பட்டார் நெஞ்சாக’ கலங்கி நிற்கிறது இலங்கை!

சீன யுவான் வாங்-5 கப்பல் இன்று காலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைய உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த கப்பலின் இலங்கைக்கான பயணத்தை ஒத்திவைக்குமாறு வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்த போதிலும், கப்பலின் பயணம் நிறுத்தப்படவில்லை.

சீனக் கப்பலின் இலங்கைப் பயணம் குறித்து இந்தியா மிகவும் கவலையடைந்துள்ளது. இது சீனாவின் உளவு கப்பல் என்று இந்தியா தெரிவித்துள்ளது. இதனால், இந்தியாவின் தென்பிராந்தியத்திலுள்ள கேந்திர நிலையங்கள் வேவு பார்க்கப்படும் என தெரிவித்துள்ளது.

சீன கப்பலின் வருகையை தடுத்து நிறுத்துமாறு இந்திய தரப்பினால், ஜனாதிபதி ரணிலுக்கு நேரடியாக தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவின் ஆட்சேபனை காரணமாக, இந்த கப்பலின் பயணத்தை ஒத்திவைக்க இலங்கை அரசு கோரிக்கை விடுத்தது.

இந்தக் கப்பல் இந்தோனேசியக் கடலில் மணிக்கு 26 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்துக் கொண்டிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

யுவான் வாங்-5 கப்பலில் 400 பணியாளர்கள் உள்ளனர். இந்த கப்பலின் இலங்கை பயணம் பற்றி மற்ற தரப்பினர் கவலைப்பட வேண்டாம் என்றும் சீனா தெரிவித்துள்ளது.

இந்த கப்பலின் பணத்திற்கு ஜூலை நடுப்பகுதியில் இலங்கை அனுமதியளித்த பின்னர், இந்திய எதிர்ப்பையடுத்து சீன கப்பலின் வருகையை தள்ளிவைக்குமாறு கோரியிருந்தது. எனினும், அதனை மீறி சீன கப்பல் இலங்கைக்குள் நுழையவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலைமையில் இந்தியா, சீனா பூகோள போட்டியில் இலங்கை சிக்கியுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உட்கட்சி மோதல் உச்சம்… 4வது வழக்கில் மத்தியகுழு முடக்கப்படலாம்: இலங்கை தமிழ் அரசு கட்சி ஸ்தம்பிக்கும் நிலை!

Pagetamil

அரச வைத்தியர்களின் ஓய்வு வயது நீடிப்பு

east tamil

எட்கா ஒப்பந்தம் குறித்து மத்திய வங்கி ஆளுநர் – கலாநிதி நந்தலால் வீரசிங்க

east tamil

2025 பெப்ரவரி முதல் தனியார் வாகன இறக்குமதிக்கு அனுமதி!

Pagetamil

அர்ச்சுனாவை நாடாளுமன்றத்திலிருந்து தகுதி நீக்குங்கள்: மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு!

Pagetamil

Leave a Comment