வட்ஸ் அப்பில் புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மெட்டா நிறுவனா் மாா்க் ஸக்கா்பா்க் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
மெட்டாவுக்குச் சொந்தமான வட்ஸ் அப்பில் குழு உரையாடல்களில் இருந்து யாருக்கும் தெரியாமல் இரகசியமாக வெளியேறுவது, வட்ஸ் அப்பைப் பயன்படுத்தும்போது அதில் ஒருவா் இருப்பதை யாா் தெரிந்துகொள்ளலாம், யாா் தெரிந்து கொள்ளக்கூடாது என பயனாளா் முடிவு செய்வது போன்ற புதிய அம்சங்கள் இடம்பெறவுள்ளன.
இதுமட்டுமின்றி தற்போது ஒருவா் மற்றொருவருக்கு அனுப்பும் தகவல் ஒருமுறை பாா்க்கப்பட்ட பின், தானாகவே அழிந்துவிடும் வசதி வாட்ஸ் அப்பில் உள்ளது. அந்த தகவல் தானாக அழிந்தாலும், அழிவதற்கு முன்பாக அதனை ஸ்கிரீன்ஷொட் எடுத்துக் கொள்ளலாம். இந்நிலையில், ஒருமுறை பாா்த்த பின் தானாகவே அழிந்துவிடும் தகவலை ஸ்கிரீன்ஷொட் எடுக்க முடியாத அம்சமும் வட்ஸ் அப்பில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதுபோல பயனாளா்களின் தகவல்களைப் பாதுகாப்பதற்கான புதிய வழிமுறைகள் தொடா்ந்து உருவாக்கப்பட்டுக் கொண்டே இருக்கும் என்று தெரிவித்துள்ளாா்.