26.3 C
Jaffna
February 2, 2025
Pagetamil
இலங்கை

அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் கைதாவதை தடுக்க கோரும் மனுவிற்கு சட்டமா அதிபர் ஆட்சேபம்!

அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படுவதை தாம் எதிர்ப்பதாக சட்டமா அதிபர் இன்று (09) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றில் ஆஜராகியிருந்த அரச சட்டத்தரணி  நவிந்த டி விக்ரமசிங்க, ஜீவந்த பீரிஸினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த மனு எல். டி. பி. தெஹிதெனிய, யசந்த கோதகொட மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மனுதாரர் ஏற்கனவே நீதிமன்ற உத்தரவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

மனுதாரர் தற்போது தலைமறைவாக இருப்பதாகவும், அவர் கைது செய்யப்படுவதை தடுக்கும் நீதிமன்ற உத்தரவை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் அரச சட்டத்தரணி தெரிவித்தார்..

மனுதாரர் சார்பில் நீதிமன்றில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி றியன்சி அர்சகுலரத்ன, தனது கட்சிக்காரர் எந்தவொரு சட்டவிரோத செயலையும் செய்யவில்லை எனவும், அடிப்படை உரிமை மனுவில் கோரப்பட்டுள்ள நிவாரணம் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்த மனுவை செப்டம்பர் 1ஆம் திகதி மீளவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தந்தையை கத்தியால் குத்தி கொன்ற மகன் கைது

east tamil

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

east tamil

கிணற்றில் விழுந்து பச்சிளம் குழந்தை பலி

east tamil

புரியாத புதிராக எனது நீதித்துறை வாழ்க்கை முடிகிறது

Pagetamil

மாவைக்கு அஞ்சலி செலுத்திய அரசியல் பிரமுகர்களின் படத் தொகுப்பு

east tamil

Leave a Comment