கொட்டாஞ்சேனை புனித பெனடிக்ட் மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றிற்கு நேற்று (08) காலை பொலிஸ் உத்தியோகத்தர்கள் என கூறிக்கொண்டு ஆயுதம் தாங்கிய இரு கொள்ளையர்கள் அத்துமீறி நுழைந்து வீட்டின் உரிமையாளருக்கு கொலைமிரட்டல் விடுத்து சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள், பணம் என்பவற்றை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமான இந்த வீட்டில் நேற்று காலை தொழிலதிபரின் மனைவி மட்டும் இருந்துள்ளார்.
காலை 9.30 மணியளவில் வெள்ளைச் சட்டை, கறுப்பு காற்கட்டை அணிந்தபடி தம்மை சிஐடியினர் என கூறிக்கொண்டு, கை விலங்கொன்றை கையில் வைத்தபடி இருவர் வீட்டுக்குள் நுழைந்தனர்.
வீட்டுக்குள் நுழைந்து, பெண்ணின் தலையில் கைத்துப்பாக்கியை வைத்து கொலைமிரட்டல் விடுத்து, அவரை கதிரையில் கட்டி வைத்துள்ளனர்.
வீட்டுக்குள் சல்லடையிட்டு ஒரு கோடியே எழுபது இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளையும், கிட்டத்தட்ட இருபத்தைந்து இலட்சம் ரூபா பணத்தையும் கொள்ளையடித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.