கொழும்பிலிருந்து அவிசாவளைக்கு சென்ற புகையிரதத்தில் ஒன்பது வயது சிறுவனை கடத்தி சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரையும், சிறுவனையும் மஹரகம புகையிரத நிலைய பொலிஸ் அதிகாரியிடம் பொதுமக்கள் ஒப்படைத்துள்ளனர்.
நேற்று (4) இரவு 8.00 மணியளவில் கொழும்பு கோட்டையிலிருந்து அவிசாவளை நோக்கி செல்லும் புகையிரதத்தல் சிறுவனும், மற்றொருவரும் பயணித்துள்ளனர்.
சிறுவன் அழுதுகொண்டு சென்றார். சிறுவன், கூட சென்றவரின் நடத்தையில் சந்தேகம் அடைந்த பயணிகள், அந்த நபரிடம் விசாரித்த போது, அவர் புகையிரதத்தில் இருந்து தப்பி ஓட முயன்றார்.
எனினும், பொதுமக்களால் பிடிக்கப்பட்டார்.
சிறுவன் தலவத்துஓயாவைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சிறுவன் புதன்கிழமை தனது பெற்றோருடன் வழிபாட்டிற்கு சென்றபோது, குறித்த நபரால் கடத்தப்பட்டுள்ளார்
சிறுவனுக்கு விளையாட்டுப் பொருட்களை வாங்குவதற்காக கொழும்புக்கு அழைத்து வந்ததாக சந்தேக நபர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
சிறுவன் காணாமல் போனமை தொடர்பில் பெற்றோர் கண்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
30 வயதான சந்தேக நபர் பேராதனை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.