காலி முகத்திடலில் இருந்து நாளை மாலை 5 மணிக்குள் காலி முகத்திடலில் இருந்து வெளியேறுமாறு பொலிஸார் வழங்கிய பணிப்புரையை இடைநிறுத்துமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் நான்கு ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
காலி முகத்திடலில் உள்ள ஆர்ப்பாட்டக்காரர்களை அனைத்து கட்டமைப்புகளையும் அகற்றிவிட்டு அப்பகுதியை காலி செய்யுமாறு கொழும்பு கோட்டை பொலிஸார் நேற்று அறிவித்துள்ளனர்.
நாளை மாலை 5 மணிக்குள் போராட்டக்காரர்கள் வெளியேற வேண்டும் என கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
போராட்டக்காரர்கள் சட்டத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும், பொது அமைதிக்கு இடையூறு விளைவிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கோட்டை காவல்துறையின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பிற்குகு செவிசாய்க்கத் தவறும் நபர்கள் சட்ட நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்றும் கோட்டை பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
அதன்படி, போராட்டக்காரர்களுக்கு காவல்துறை பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன