24.8 C
Jaffna
January 8, 2025
Pagetamil
இலங்கை

மேல் மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரை தாக்கியவர்களின் புகைப்படங்களை வெளியிட்ட பொலிசார்!

கொள்ளுப்பிட்டி பெரஹெர மாவத்தையில் மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் மற்றும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கி காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள்ளை அடையாளம் காண கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.

பொலிஸ் தலைமையகம் இன்று (4) இவர்களின் பல புகைப்படங்களை ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்தது.

சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப்பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான நெருக்கமான காணொளி காட்சிகளில் இருந்து இந்த முக்கிய சந்தேகநபர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னர் பல சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

பொலிஸாரினால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த புகைப்படங்களில் உள்ளவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால், 0718591735, 0718592735, 0718591733 ஆகிய இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொள்கிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் ஒராங்குட்டான் உயிரிழப்பு

east tamil

வெளிநாடு செல்லும் கனவுக்காக போதைப்பொருள் விற்ற மாணவன் கைது

east tamil

வேலை நிறுத்தத்துக்கு தயாராகும் தனியார் பேருந்து சங்கங்கள்!

Pagetamil

இலங்கையில் 30,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை

east tamil

புலம்பெயர்ந்த இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

east tamil

Leave a Comment