முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட பலருக்கு விதிக்கப்பட்ட சர்வதேச பயணத் தடையை ஓகஸ்ட் 4 ஆம் திகதி வரை நீடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழு, நீதிமன்ற அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுத்து இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவார்ட் கப்ரால், டபிள்யூ.டி.லக்ஷ்மன் மற்றும் திறைசேரியின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோருக்கு சர்வதேச பயணத்தடை விதிக்குமாறு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1