அருட்தந்தைக்கு ஜீவந்த பீரிஸ் மற்றும் மக்கள் எதிர்ப்பு இயக்கத்தின் ஏனைய உறுப்பினர்களிற்கு எதிராக ரணில், ராஜபக்ஷ அரசின் அடக்குமுறைக்கு எதிராக. இலங்கையில் உள்ள 1640 கத்தோலிக்க அருட்தந்தையர், அருட் சகோதரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர் .
கத்தோலிக்க பாதிரியார்கள் கையொப்பமிட்ட கூட்டறிக்கையில், அருட்தந்தையை கைது செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அவர்கள் தீவிர கவலை தெரிவித்துள்ளனர்.
ஜீவந்த பீரிஸ், இரத்தினபுரி மறைமாவட்டத்தைச் சேர்ந்த கத்தோலிக்க அருட் தந்தையாவார்.
மக்கள் போராட்ட குழுவினர் மீது ரணில், ராஜபக்ஷ அரசு மேற்கொள்ளும் வேட்டையின் ஒரு பகுதியாக அருட்தந்தை ஜீவந்த பீரிஸை கைது செய்ய பொலிசார் தேடுதல் மேற்கொண்டுள்ளனர்.
ஜூலை 25 அன்று, கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம், அருட்தந்தை ஜிவந்த பீரிஸ் மற்றும் பல மக்கள் போராட்ட செயற்பாட்டாளர்கள் மீது பயணத்தடை விதித்தது.




