ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவன் கிம்புல எல குணாவின் போதைப்பொருள் வலையமைப்பை நடத்தி வந்த இருவரை, கைக்குண்டு, கேரள கஞ்சா மற்றும் ஹெரோயின் என்பவற்றுடன் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
இவர்கள் தொடர்பில் கிடைத்த தகவலின் பிரகாரம் வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளியாவத்தை கார்மல் லேன் சந்திக்கு அருகில் நேற்று (28) சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
15 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான 06 கிலோ 440 கிராம் கேரள கஞ்சா, 05 கிராம் 300 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் வெளி நாட்டில் தயாரிக்கப்பட்ட எம்67 ரக கைக்குண்டு என்பன கைப்பற்றப்பட்டன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1