இருவேறு குற்றச்செயல்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சில பகுதிகளில் துவிச்சக்கர வண்டியைகளை திருடிய சந்தேகத்தில் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை அதே பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவரும் தர்மபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து துவிச்சக்கரவண்டிகள் ஐந்து மீட்கப்பட்டுள்ளதுடன், சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபரிடமிருந்து 72 லீற்றர் கசிப்பும், கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தபடும் உபகரணங்களும் பொலிசாரல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் மூவரும் (29) நாளைய தினம் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி D.M சதுரங்க தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1