போதையில் காதலனுடன் தாறுமாறாக கார் ஓட்டி, 5 வாகனங்களுடன் மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்ற நடிகை அஸ்வதியை வாகன ஓட்டிகள் விரட்டிப்பிடித்து போலீஸில் ஒப்படைத்துள்ளனர்.
நடிகையும், காதலன் நவுபல் என்பவரும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.
கொச்சி குசாட் சந்திப்பு சாலையில் தறிகெட்டு சென்ற கார் அந்தவழியாக் வந்த 4 இரு சக்கரவாகனங்கள், ஒரு கார் என்பவற்றை மோதியதுடன், சாலையோர தடுப்புகளிலும் உரசியபடி அதிவேகத்தில் சென்றது. அந்த காரை பலர் விரட்டிச்சென்ற நிலையில் பைக்கில் விரட்டிச்சென்ற இளைஞர் ஒருவர் அந்த காரை முந்திச்சென்று மறித்தார்.
அவரிடம் இருந்து தப்பிப்பதற்காக காரை சாலையை விட்டு இறக்கிய போது கல் குத்தியதில் முன்பக்க டயர் வெடித்ததால் மேற்கொண்டு செல்ல முடியாமல் அஸ்வதியின் கார் அங்கேயே மடக்கி நிறுத்தப்பட்டது.
காருக்குள் இருந்து இறங்கிய நடிகை அஸ்வதியும் , காதலன் நவுபல்லும் தங்களை விரட்டி வந்து வீடியோ எடுத்தவர்களிடம் வாக்குவாதம் செய்தனர். பின்னர் போலீஸ் வருவதற்குள் தப்பிச்செல்வதற்காக வேகமாக நடக்க ஆரம்பித்தனர்.
அதற்குள்ளாக அங்கு வந்த திருக்காக்கரை போலீசார் அங்குள்ள ஒரு கடையில் கையில் குளிர்பானத்துடன் வாடிக்கையாளர் போல பதுங்கி இருந்த அஸ்வதியையும், நவுலையும் மடக்கிப் பிடித்து விசாரணைக்காக அழைத்துச்சென்றனர்.
மது அருந்தியது தொடர்பாக இருவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. போதையில் கார் ஓட்டிய நடிகை அஸ்வதி மற்றும் காதலன் நவுல் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
நடிகை அஸ்வதி போலீசில் சிக்குவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு தான் தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பெண்களை போதைக்கு அடிமையாக்கி அடைத்து வைத்து பாலியல் தொழில் செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரது வீட்டிலிருந்து ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டது.
பொலிசாரின் விசாரணையில், தன்னால் போதைப்பொருள் இல்லாமல் இருக்க முடியாதென அஸ்வதி குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக, அஸ்வதி போதைப்பொருளுடன் டுபாயில் 2016ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.