25 C
Jaffna
January 12, 2025
Pagetamil
குற்றம்

63 வயதுப் பெண்ணை வன்புணர முயன்ற 16 வயதுச் சிறுவனுக்கு நீதிமன்று பிணை!

63 வயது வயோதிபப் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட 16 வயதுச் சிறுவனை பிணையில் விடுவித்தது மல்லாகம் நீதிமன்று.

கல்விளானைச் சேர்ந்த வயோதிபப் பெண்ணொருவர் நேற்று முன்தினம் (25) பொன்னாலை – மூளாய் பெரியகுளத்தில் மீன் பிடித்துவிட்டு கரையேறி பாதை மாறி பொன்னாலை வீதிக்குச் சென்றிருந்தார்.

இதன்போது பொன்னாலையில் வசிக்கும் 16 வயதுச் சிறுவன் ஒருவன் அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்று விடுவதாகக் கூறி காட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டது.

குறித்த சிறுவன் துவிச்சக்கரவண்டியில் தன்னைக் காட்டுக்கு அழைத்துச் சென்று வண்புணர முயன்றார் என பாதிக்கப்பட்ட பெண்ணால் குற்றஞ்சாட்டப்பட்டது.

சிறுவன் தான் அணிந்திருந்த சேர்ட்டைக் கழற்றி தனது வாயைக் கட்டினார் எனவும் தான் அவனைத் தாக்கிவிட்டு தப்பித்து ஓட முற்பட்டபோது பின்னால் துரத்திவந்து சட்டையைப் பிடித்து இழுத்து வீழ்த்தினான் எனவும் அப்போது அப்பகுதியால் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை தான் உதவிக்கு அழைத்தபோது சிறுவன் அங்கிருந்து தப்பியோடினான் எனவும் பாதிக்கப்பட்ட பெண்ணால் கூறப்பட்டது.

சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து குறித்த சிறுவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவர் இன்று (27) புதன்கிழமை மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இதேவேளை, குறித்த சிறுவனின் தாயார் சவுதி அரேபியா நாடொன்றுக்கு பணிப்பெண்ணாக சென்றுவிட்டார் எனவும் தந்தையாருடன் வசிக்கும் சிறுவன் போதைப்பொருள் பாவிப்பவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வீடு உடைத்து பெண்ணை வல்லுறவுக்குள்ளாக்கி கொள்ளையடித்தவருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

Pagetamil

கசிப்பு குடிக்க ரூ.300 தராத மனைவியை அடித்துக் கொன்ற முரட்டுக் கணவன்

Pagetamil

பெண்ணுடன் எக்குத்தப்பாக நடந்த பொலிஸ்காரர் கைது!

Pagetamil

யாழ்ப்பாணத்தில் மலைவிழுங்கி மனேஜர் கைது!

Pagetamil

சிறுவர் இல்லத்தில் சீரழிக்கப்பட்ட 9 வயது சிறுமி!

Pagetamil

Leave a Comment