இயக்குனர் கமலகண்ணன் இயக்கத்தில் சிபி சத்யராஜ் நடித்திருக்கும் படம் வட்டம். இப்படம் ஜூலை 29 ஆம் திகதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இப்படத்தில் சமுத்திரகனி, ஆண்ட்ரியா, மஞ்சிமா மோகன், அதுல்யா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது. இப்படம் ஜூலை 29 ஆம் திகதி நேடியாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. பணத்தை கொள்ளையடிப்பது, போலீசார் விசாரிப்பது போன்ற காட்சிகளுடன் விறுவிறுப்பாக உருவாகியுள்ள இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1