Pagetamil
முக்கியச் செய்திகள் விளையாட்டு

பாகிஸ்தானிற்கு 508 ஓட்டங்கள் வெற்றியிலக்கு!

பாகிஸ்தானிற்கு எதிரான முதலாவது டெஸ்டின் நான்காவது நாளான இன்று, இலங்கை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 360 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் இரண்டாவது இன்னிங்சை டிக்ளேர் செய்துள்ளது.

இதன்படி, பாகிஸ்தானுக்கு 508 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

காலி மைதானத்தில் நடக்கும் இந்த ஆட்டத்தில், இலங்கையின் இரண்டாவது இன்னிங்சில் தனஞ்சய டி சில்வா  109 ஓட்டங்களுடன் ரன் அவுட் முறையில் 8வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.

திமுத் கருணாரத்ன 61 ஓட்டங்களையும்,ரமேஷ் மென்டிஸ் ஆட்டமிழக்காமல் 45 ஓட்டங்களையும் பெற்றனர்.

நஷீம் ஷா, மொஹமட் நவாஸ் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இதேவேளை, இன்றைய ஆட்டத்தில் இலங்கை வீரர் திமுத் கருணாரத்ன டெஸ்ட் ஆட்டங்களில் 6,000 ஓட்டங்களை கடந்துள்ளார். இந்த இலக்கை கடந்த 6வது இலங்கை வீரர் கருணாரத்ன ஆவார்.

இதையும் படியுங்கள்

முன்னர் ஒன்றாக வந்தீர்கள்… இப்போது மூன்றாக வந்துள்ளீர்கள்; தமிழர்களுக்கிடையிலானதே மீனவர் பிரச்சினை: மோடி- தமிழ் கட்சிகள் சந்திப்பில் பேசப்பட்டவை!

Pagetamil

இலங்கை- இந்தியாவுக்கிடையில் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

Pagetamil

நரேந்திர மோடிக்கு பெரும் வரவேற்பு!

Pagetamil

‘என் மனைவியை தொட்டால்…’: ஜனாதிபதி அனுரவை எச்சரித்த மஹிந்தவின் சகா!

Pagetamil

Update: புதிய வாகன பதிவுகளுக்கு மட்டுமே வரி அடையாள எண் தேவை!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!