27.4 C
Jaffna
December 22, 2024
Pagetamil
இலங்கை

அரசியல்வாதிகளின் வீடுகள் எரிக்கப்பட்டதன் பின்னணியில் புலிகளா?: பதவி கிடைத்ததும் அமைச்சருக்கு வந்த சந்தேகம்!

மக்கள் போராட்டத்தின் ஆரம்ப நாட்களில் நாட்டு இளைஞர்களின் நேர்மையான குரல்கள் இருந்த போதிலும், தற்போது மக்கள் போராட்டத்தின் பின்னணியில் பல்வேறு இருண்ட சக்திகள் செயற்படுகின்றனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அவசரகாலச் சட்டங்கள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் பிரேமஜயந்த, 74 நாடாளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட சொத்துக்கள் தீயிட்டு நாசமாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மக்கள் போராட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதாகக் கூறிக்கொள்ளும் சில இனந்தெரியாத நபர்கள் பொது நிதியில் சொத்துக்கள் கட்டப்பட்டதாகக் கூறுகின்றனர், உண்மையில் சில குடியிருப்புகள் அத்தகைய பாராளுமன்ற உறுப்பினர்களின் மூதாதையர்களால் கட்டப்பட்டதாக அமைச்சர் கூறினார்.

அழிக்கப்பட்ட சொத்துக்களை மீளக் கட்டியெழுப்புவதற்கு சில பாராளுமன்ற உறுப்பினர்களிடம் நிதி வசதி இல்லை என தெரிவித்த சுசில், எம்.பி கீதா குமாரசிங்க கலைஞராகப் பெற்ற விருதுகளும் அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைக்கப்பட்டது மாத்திரமன்றி புத்த பெருமானின் சிலைகளும் அழிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் செயல்களின் பின்னணியில் உள்ள நோக்கங்கள் குறித்து ஆராயப்பட வேண்டும் என்றும், விடுதலைப் புலிகள், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் அல்லது சர்வதேச சக்திகளுடன் தொடர்புள்ளவர்கள் இதில் ஈடுபட்டார்களா என்பதும் கண்டறியப்பட வேண்டும் என்றும் அமைச்சர் பிரேமஜயந்த கூறினார்.

ஜூலை 13 ஆம் திகதி இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைந்து நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்த நபர் ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட போது விமானத்தில் பயணித்த போது கைது செய்யப்பட்டதாக அமைச்சர் கூறினார்.

இந்தக் காரணங்களால் அவசரகாலச் சட்டம் தேவைப்படுவதாக அமைச்சர் பிரேமஜயந்த தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தலைவன் பிறந்த ஊர் என்பதால் நிராகரிப்பா?: வல்வெட்டித்துறை மக்கள் போராட்டம்!

Pagetamil

மாவீரர்நாளில் அரசியல் செய்யும் சிறிதரன் குழுவின் நடவடிக்கைக்கு முன்னாள் போராளிகள் எதிர்ப்பு

Pagetamil

சட்ட விரோத அகழ்வு பணிகளில் ஈடுபட்ட மூவர் கைது

east tamil

மோப்ப நாய்களுடன் கிளிநொச்சிப் பொலிசார் வீதிச் சோதனை

Pagetamil

வேலணை மக்களுக்கு அதிர்ச்சிச் செய்தி: 24 மணித்தியால மருத்துவ சேவை தடைப்படும் அபாயம்!

Pagetamil

Leave a Comment