ஒரு மணித்தியாலயத்திற்கு 15000 ரூபாவுக்கு இளம் பெண்களை விற்பனை செய்யும் விபச்சார வலையமைப்பை பொலிசார் மடக்கிப் பிடித்துள்ளனர். விபச்சார அழகிகள் நான்கு பேர் பம்பலப்பிட்டியில் கைது செய்யப்பட்டனர். முகாமையாளரும் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர்கள் பிபில பிரதேசத்தை சேர்ந்த திருமணமாகாத 17, 22, 25, 45 வயதுடைய பெண்கள் எனவும் முகாமையாளர் கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த 45 வயதான திருமணமாகாதவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த யுவதிகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடப்படுகிறது. அந்த யுவதிகளுடன் உல்லாசமாக இருக்க பணம் செலுத்துபவர்களிற்கு, நவீன ரக வாகனங்களில் யுவதிகள் ஏற்றிச் செல்லப்பட்டு விநியோகிக்கப்படுகிறார்கள்.
கைது செய்யப்பட்ட முகாமையாளர் யுவதிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தினார் என்ற குற்றச்சாட்டில் முன்னரும் கைது செய்யப்பட்டவர்
கைது செய்யப்பட்ட போது சந்தேகநபரிடம் இருந்து 2190 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் இருந்ததையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.