நீதிமன்ற உத்தரவை மீறி காலிமுகத்திடல் பண்டாரநாயக்கவின் சிலைக்கு முன்பாக நின்றிருந்த நிலையில் கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நான்கு செயற்பாட்டாளர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று (26) உத்தரவிட்டுள்ளார்.
பண்டாரநாயக்க சிலையிலிருந்து 50 மீற்றர் சுற்று வட்டத்தில் நுழைவதற்கு தடை விதித்து கொழும்பு கோட்டை நீதிமன்றம் கடந்த 20ஆம் திகதி உத்தரவு பிறப்பித்திருந்தது. கோட்டை பொலிஸார் நீதிமன்றத்திடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதன்படி கடந்த 24ம் திகதி நீதிமன்ற உத்தரவை மீறி அந்த இடத்தில் தங்கியிருந்த நான்கு போராட்டக்காரர்களை பொலிசார் கைது செய்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1