இலங்கைக்கு ரூ.3.4 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள மனிதாபிமான பொருட்களை தமிழக அரசு நன்கொடையாக வழங்கியுள்ளது.
கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்கொடையாக வழங்கிய சரக்குகளில் 40,000 மெட்ரிக் தொன் அரிசி, 500 மெட்ரிக் தொன் பால்மா மற்றும் 22 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள 100 மெட்ரிக் தொன் மருந்துகளும் உள்ளடங்குவதாகத் தெரிவித்துள்ளது.
இந்த நன்கொடை அமைச்சர்களான அலி சப்ரி மற்றும் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோரால் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1