எரிபொருள் கோரி வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்ப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பரந்தன் சந்தியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றைய நாளுக்கான இலக்கத்தகட்டின் இறுதி இலக்கத்தினடிப்படையில் வரிசையில் காத்திருந்த மக்களே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
A9 வீதியினை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது, அப்பகுதிக்கு வருகை தந்த பொலிசார் ஒருவரை கைது செய்து வாகனத்தில் ஏற்றினர்.
இந்த நிலையில், பொதுமக்கள் பொலிசாரிடம் வேண்டுகை விடுத்ததற்கமைவாக குறித்த நபரை விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்தனர்.
குறித்த மக்களிற்கு தொடர் இலக்கம் வழங்கப்பட்டு, எரிபொருள் வந்ததும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னர் மக்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1