கூகிளின் இணை நிறுவனர் செர்கேய் பிரினின் மனைவி நிக்கோல் ஷனாஹனுடன் கள்ளக்காதலில் ஈடுபடவில்லை என்று Tesla நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் கூறியுள்ளார்.
நிக்கோல் ஷனஹானுடன் அவர் சிறிது காலம் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக Wall Street Journal செய்தி நிறுவனம் அறிக்கை ஒன்றில் கூறியது.
இந்த விவகாரத்தை அறிந்த பிரின், இந்த வருட தொடக்கத்தில் மனைவியிடமிருந்து
விவகாரத்து கோரியதாகவும், மஸ்க்குடன் நட்பைத் துண்டித்ததாகவும் கூறப்பட்டது.
மஸ்கின் நிறுவனங்களில் உள்ள தனிப்பட்ட முதலீடுகளை விற்கும்படியும் பிரின் தம்முடைய ஆலோசகர்களிடம் கூறியதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
“செர்கேய்யும் நானும் நண்பர்கள்..இருவரும் நேற்றிரவு விருந்தில் ஒன்றாகக் கலந்துகொண்டோம். நிக்கோலை நான் கடந்த மூன்றாண்டுகளில் இரண்டு முறை மட்டுமே பார்த்தேன். அப்போது மற்றவர்களும் கூட இருந்தனர்,” என்று மஸ்க் ருவிற்றரில் பதிவிட்டார்.