இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் மஹேல ஜயவர்தன, இன்று காலை ஆயுதப்படையினரால் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவம் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் ஒரு அடக்குமுறையை நடத்தியது. இது உலகளாவிய சீற்றத்தைத் தூண்டியது. நாடு முழுவதும் அதிக எதிர்ப்புகளைத் தூண்டியது.
தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த மஹேல ஜயவர்தன, 2022 மே 09 ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசுவாசிகளால் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து ஐக்கிய தேசியக் கட்சியின் பழைய ட்வீட்டைக் குறிப்பிட்டார்.
காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்த ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் மட்டுமல்ல முழு அரசாங்கமும் இராஜினாமா செய்ய வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி ட்வீட் செய்திருந்தது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பழைய டுவீட்டைக் குறிப்பிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜயவர்தன, “ஐக்கிய தேசியக் கட்சி இந்த ட்வீட்டை விரைவில் நீக்க வேண்டும். இல்லை என்றால் புதிய அமைச்சரவை நியமிக்கப்படுவதற்கு முன்பே மீண்டும் ராஜினாமா செய்யப்படும்” என்றார்.
இதற்கிடையில், முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜெயசூர்யாவும் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்தார்.
@officialunp should delete this tweet quickly if not will have another resignation even before the new cabinet is appointed. What power dose to people… pic.twitter.com/yfLPDuxk6e
— Mahela Jayawardena (@MahelaJay) July 22, 2022
“நிராயுதபாணியான எதிர்ப்பாளர்கள் ஏற்கனவே வெளியேற ஒப்புக்கொண்டபோது அவர்கள் தாக்கப்பட்டதைப் பார்ப்பது பயங்கரமானது” என்று கூறினார்.
It was terrible to see unarmed protesters being attacked when they had already agreed to leave. Remember the first job at hand is to reduce the suffering of the people not increase it. Please don’t add fuel to the fire.
— Sanath Jayasuriya (@Sanath07) July 22, 2022
மக்கள் படும் துன்பங்களை குறைப்பதே முதல் வேலை என்று கூறிய ஜயசூரிய, தீயில் எண்ணெய் வார்க்க வேண்டாம் என ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார்.