ஜூலை 09 ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கு தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID) பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
சட்டவிரோதமாக பிரவேசித்தல், வீட்டிற்கு தீ வைப்பது, ஜனாதிபதியின் வாகனத்தை சேதப்படுத்துதல் போன்றவற்றில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்கள் அல்லது வீடியோ காட்சிகளை அனுப்பி வைக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் 071-8594950 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு இந்த சாட்சியங்கள் மேலும் உதவும் என பொலிஸார் தெரிவித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1