அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்குக் கோவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளது.
அவருக்கு மிதமான அறிகுறிகள் இருப்பதாகவும், அவர் தொடர்ந்து தமது பணிகளை மேற்கொள்வார் என்றும் வெள்ளை மாளிகை கூறியது.
கூட்டங்களில், அவர் தொலைபேசி, காணொளி வழி கலந்துகொள்வார்.
அவர் வெள்ளை மாளிகையில் தம்மைத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
79 வயதுடைய பைடன், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர். இரு முறை பூஷ்டர் தடுப்பூசியையும் எடுத்துக்கொண்டவர்.
எனினும், அவரது மனைவி ஜில் பைடனுக்குக் கொரோனா தொற்று ஏற்படவில்லை.
பைடனுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த அனைவருக்கும் வெள்ளை மாளிகை மருத்துவப் பிரிவு தகவல் தெரிவிக்கவிருக்கிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1